கோவை செட்டிபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்த 102 வயது மூதாட்டி உயிரிழப்பு

102 வயது ஆனதால் சுப்பாத்தாளுக்கு கண்பார்வை சற்று மங்கலாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு அவர் சிறுநீர் கழிக்க வீட்டின் பின்னால் சென்ற போது, கிணற்றில் அவர் தவறி விழுந்துள்ளார்.


கோவை: கோவை செட்டிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் காளியப்பகவுண்டர், இவரது மனைவி சுப்பாத்தாள் (102). இவர் தனது பேரன் பாலசுப்பிரமணியத்துடன் வசித்து வருகிறார்.

102 வயது ஆனதால் சுப்பாத்தாளுக்கு கண்பார்வை சற்று மங்கலாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுப்பாத்தாள் சிறுநீர் கழிக்க வீட்டின் பின்னால் சென்றதாக தெரிகிறது. அப்போது, அங்கிருந்த கிணற்றில் அவர் தவறி விழுந்துள்ளார்.

பின்னர், நீண்ட நேரமாகியும் அவர் உள்ளே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், பின்னால் சென்று பார்த்தபோது, அவர் கிணற்றுக்குள் விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பாலசுப்பிரமணியம், செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து, அங்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...