கோவையில் பெண் மருத்துவரிடம் 14.5 பவுன் செயின் பறிப்பு - 3 இளைஞர்கள் கைது…!

பிடிபட்ட மூவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மருத்துவரிடம் பறித்த 14.5 பவுன் செயினை சிவகங்கை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அடமானம் வைத்து பணத்தை வாங்கிச் சென்றது தெரியவந்தது.


கோவை: கோவை காரமடையை சேர்ந்தவர் ராம் தீபிகா. இவர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 24ம் தேதி பணி முடிந்து மதியம் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, காரமடை தனியார் திருமண மண்டபம் அருகே வந்த போது அவருக்கு பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த 14.5 பவுன் இரண்டு தங்கச் செயின்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

திருடர்களை அந்த பெண் மருத்துவர் பிடிக்க முயன்ற போது, மூன்று மர்ம நபர்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம், தொடர்பாக மருத்துவர் ராம் தீபிகா காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள பல்வேறு சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆய்வில், இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டது விருதுநகர் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ரஞ்சித்குமார் (22) அஜித்குமார் (21) மற்றும் கோவை மாவட்டம் சித்ராவை சேர்ந்த அபிஷேக் குமார் (24) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் கோனார்பட்டு கிராமத்திற்கு சென்று அங்கு பதுங்கியிருந்த 3 பேரையும் கைது செய்தனர்.

இதையடுத்து, அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மருத்துவரிடம் பறித்த 14.5 பவுன் சங்கிலியைச் சிவகங்கை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அடமானம் வைத்து பணத்தை வாங்கிச் சென்றது தெரியவந்தது.

மேலும், இவர்கள் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அதேபோல், செயின் பறிக்க பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளை மடக்கி வைத்திருப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர், அந்த மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 17.5 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், மருத்துவரிடம் திருடிச் சென்ற 14.5 பவுன் செயினை வங்கியில் இருந்து மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...