ஆனைமலை அருகே குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி…!

வீட்டில் பழுதடைந்து இருந்த குளிர்சாதன பெட்டியை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட போது, எதிர்பாராதவிதமாக குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து பழனிச்சாமி தூக்கி வீசப்பட்டார்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்தவர் பழனிச்சாமி (48). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த நிலையில், பழனிச்சாமி ஆனைமலை அருகே உள்ள ஒரு தோட்டத்தில் பழுதாகி இருந்த கிணறு மோட்டாரை சரி செய்ய சென்றுள்ளார்.

அப்போது, அதே வீட்டில் பழுதடைந்திருந்த குளிர்சாதன பெட்டியை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து பழனிச்சாமி தூக்கி வீசப்பட்டார்.

அதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், பழனிச்சாமியை உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், சம்பவம் தொடர்பாக ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...