திருப்பூரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட பரதநாட்டியத்துக்கு உலக சாதனை அங்கீகாரம்..!

திருப்பூர் கவிநயா நாட்டியப்பள்ளி சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 121-மாணவிகள் பரத நாட்டிய நடனமாடி உலக சாதனையை நிகழ்த்தினார்கள்.


திருப்பூர்: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 121-குழந்தைகள் பங்கேற்ற உலக சாதனைக்கான பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவில் உலக சாதனைக்காக சான்று வழங்கப்பட்டது.

திருப்பூர் கவிநயா நாட்டியப்பள்ளி சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 121-மாணவிகள் பரத நாட்டிய நடனமாடி உலக சாதனையை இன்று நிகழ்த்தினார்கள்.



இதில் 3-வயது முதல் 18-வயது வரையிலான 121-மாணவிகள் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் பரத நாட்டிய நடனமாடி அசத்தினார்கள்.



இது குழந்தைகள் மற்றும் பெண்கள் குறித்த விழிப்புணர்வுக்கான உலகின் மிகப்பெரிய விழிப்புணர்வு பரத நாட்டிய நிகழ்ச்சியாக ராபா உலக சாதனை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

இதற்கான உலக சாதனை சான்றிதழை திருப்பூர் மேயர் தினேஷ்குமார் கவிநயா நாட்டியப்பள்ளிக்கு வழங்கினார். மேலும் ஒவ்வொரு மாணவிகளுக்கும் தனித்தனியே சான்றிதழை மேயர் தினேஷ்குமார் வழங்கினார்.

இந்நிகழ்வில் இராபா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு ஆசிரியர் பிரசன்னா, கவிநயா நாட்டியப்பள்ளி ஆசிரியர் மேனகா, ஆசிரியை ஜெயந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...