கோவையில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு…!

கோவை சுகுணாபுரம் பள்ளி வாசலில், முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 300க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை சுகுணாபுரம் பள்ளி வாசலில், முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், 300க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு நோன்பு திறந்து உணவுகளை சாப்பிட்டு விரதத்தை முடித்தனர்.



அப்போது, இஸ்லாமியர்களுடன் சேர்ந்து நோம்பு கஞ்சி, மற்றும் பழங்களை உண்ட, முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அப்பகுதி பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார்.



தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி வேலுமணி கூறும் போது: இஸ்லாமிய மக்களுக்கு கோவை மாவட்ட அதிமுக சார்பில் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி, இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து, கோவையிலும் இப்தார் நோன்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, என்றார்.

இஸ்லாமியர்களுக்கு நோன்பு காலத்தில் தேவையான உதவிகளை அதிமுக அரசு செய்து வந்தது எனவும் இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்தது அதிமுக அரசு தான், என்றார். அதில், ஹஜ் பயணத்திற்கான தொகையை ரூ.10 கோடியாக உயர்த்தி கொடுத்தது மற்றும் நாகூர் தர்காவை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவு கூர்ந்தார்.

மேலும், 3 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசியை அதிமுக அரசு வழங்கியது. சிறுபான்மையினர் மக்களுக்கு என்றும் அதிமுக உறுதுணையாக இருப்போம், என்றார்.

"தற்போது, கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மோசமாக உள்ளது. கடந்த அதிமுக அரசு காலத்தில் சாலைகள் திட்ட அறிக்கையை ரத்து செய்துள்ளனர். சாலைகள் சீரமைக்கும் பணி மற்றும் குடிநீர் வினியோகம் முறையாக இல்லை. மேலும், கோவை மக்களை புறக்கணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி பணியை கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். விரைவில் விடுப்பட்ட பணிகளை செய்ய வேண்டும்", எனக் கோரிக்கை விடுத்தார்.

நடந்து முடிந்த தேர்தலுக்கு பிறகு செயல்படாத மாநகராட்சி நிர்வாகமாக இருப்பதாக குற்றச்சாட்டை வைத்த அவர், தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். மேலும், பெண்களுக்கு எதிரான வழக்கு அதிகரித்துள்ளது எனவும் மக்களுக்கு பாதுகாப்பு தரும் அரசாக திமுக மாற வேண்டும், என்றார்.

விளம்பரத்தில் தான் தற்போதைய அரசு ஒடுகிறது எனவும் திமுக ஆட்சிக்கு வந்து மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. இனியாவது எதாவது செய்ய வேண்டும், எனக் கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...