பல்லடம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனமும், சொகுசு காரும் மோதி விபத்து..!

சொகுசு காரில் வந்த திருச்சியை சேர்ந்த 2-குழந்தைகள் உட்பட 6-பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


திருப்பூர்: பல்லடம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனமும், சொகுசு காரும் மோதி விபத்துக்குள்ளானது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொல்லிக்காளிபாளையம் பகுதியிலிருந்து அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் ஒன்று பொங்கலூரில் உள்ள அரிசி மண்டிக்கு மூட்டைகளை இறக்க வந்தது.

சரக்கு வாகனத்தை பொங்கலூரை சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி வந்தார். பொங்கலூரில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்திய ஓட்டுனர் பின்புறம் வாகனம் வருவதை அறியாமல் வலது புறம் திருப்பியுள்ளார்.



அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சொகுசு காரில் வந்த திருச்சியைச் சேர்ந்த சம்சுதீன், ரியாஸ், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த கணேசனும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தினை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அவினாசி பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

சம்பவ இடம் வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...