கோவையில் அடிக்கடி ஏற்படும் சாப்ட்வேர் பிரச்சினை: மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல் மக்கள் தவிப்பு..!

சாப்ட்வேர் பிரச்சனை, திருத்தி அமைக்கப்பட்ட சொத்துவரி குறித்த தெளிவின்மை உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான பணி முடிந்தும் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.


கோவை: சாப்ட்வேர் பிரச்சனை, திருத்தி அமைக்கப்பட்ட சொத்துவரி குறித்த தெளிவின்மை உள்ளிட்ட பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமான தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளை தமிழக அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1,200-சதுரடி முதல் 1,800-சதுர அடி வரை 100-சதவீத வரி உயர்வும்.

1,801-சதுர அடிக்கு மேலாக உள்ள வீடுகளுக்கு 50-சதவீத சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களுக்கு 150-சதவீத வரி உயர்வும் கல்வி நிலையங்களுக்கு 100 சதவீத வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி உயர்வு அறிவிக்கப்பட்ட போதிலும் சொத்து வரி செலுத்துவதில் சாப்ட்வேர் பிரச்சினை மற்றும் திருத்தியமைக்கப்பட்ட சொத்துவரி குறித்த தெளிவின்மை காரணமாக சொத்து வரி செலுத்த முடியாமல் உள்ளதாகவும், இதனால் மின் இணைப்பு பெற முடியாமல் நூற்றுக்கணக்கான புதிய குடியிருப்புகள் உள்ளதாக கட்டுமான தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கட்டுமான தொழில்துறையினர் கூறியதாவது:-

தமிழகத்தில் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது. தனி வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகள் ஆடம்பர தனி வீடுகள் உள்ளிட்ட கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கட்டுமான பணிகள் நிறைவடைந்து கிரகப்பிரவேசத்திற்கு தயார் நிலையில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன.

ஆனால் புதிய வீடுகளுக்கு மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது தேவைப்படுகிறது. சொத்து வரி செலுத்துவதற்கு செல்லும் மக்கள் மற்றும் கட்டுமான தொழில் துறையினர் சாப்ட்வேர் பிரச்சனை மற்றும் திருத்தியமைக்கப்பட்ட சொத்துவரி குறித்த தெளிவின்மை காரணமாக வரி செலுத்த முடியாமல் உள்ளனர்.

தற்காலிக மின் இணைப்பு பயன்படுத்தினால் 'ஷாக்'

கட்டுமான பணி மேற்கொள்ளும் காரணங்களுக்காக மின்வாரிய அலுவலகத்திலிருந்து தற்காலிக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிரந்தர மின் இணைப்பு கிடைக்காத காரணத்தால் மின்வாரியத்திலிருந்து பெறப்பட்டுள்ள தற்காலிக மின் இணைப்பு வைத்துக்கொண்டே கிரகப்பிரவேசம் நடத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கிரகப் பிரவேசம் முடிந்து பலர் புதிய வீடுகளுக்கு குடிபெயர தயாராக உள்ளனர்.

அவ்வாறு செல்லும் பட்சத்தில் தற்காலிக மின் இணைப்பு பயன்படுத்தினால் இரு மடங்கு மின் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இப்பிரச்சினை உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...