சென்னையிலிருந்து, கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆழியார் அணை பகுதிக்கு சுற்றுலா வந்த சென்னை இளைஞர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: சென்னையிலிருந்து, கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆழியார் அணை பகுதிக்கு சுற்றுலா வந்த சென்னை இளைஞர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேடவாக்கம் சாலையை சேர்ந்தவர் ஆல்பர்ட் பெஞ்சமின் (42). இவர் தனியார் அறக்கட்டளை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது அறக்கட்டளையில் பணியாற்றி வரும் 17 நபர்களுடன் நேற்று முன்தினம் கோவைக்கு சுற்றுலா வந்துள்ளார்.
அப்போது, பொள்ளாச்சி ஆழியார் அணைக்கு சென்ற ஆல்பர்ட் பெஞ்சமின் உள்ளிட்ட 18 பேர் அணையின் ஆற்றுப்பாலம் அருகே இறங்கி குளித்துக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது, சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் திடீரென தண்ணீர் அதிகம் உள்ள இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, நீரில் மூழ்கி தத்தளித்ததாக தெரிகிறது. இதை கண்ட ஆல்பர்ட் பெஞ்சமின் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் தண்ணீரில் குதித்து ஹரிஹரனை மீட்டு, உடனே சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம், தொடர்பாக ஆழியார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.