கோவையில் 24-மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் - மேயர் கல்பனா துவக்கி வைத்தார்..!

கோவை 24-மணி நேர குடிநீர் திட்டத்திற்கு 2-கோடி மதிப்பிலான மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.



கோவை: கோவை மாநகராட்சி, 19-வது வார்டுக்கு உட்பட்ட சுதர்சன் அவென்யூவில், ரூ.2-கோடி மதிப்பீட்டில், 20-லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட உள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 24-மணி நேர குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி, கோவை மாநகராட்சி, 19-வது வார்டுக்கு உட்பட்ட சுதர்சன் அவென்யூவில், ரூ.2-கோடி மதிப்பீட்டில், 20-லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட உள்ளது.



இப்பணிக்கான பூமி பூஜையில், மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார் கலந்துகொண்டு பணியை துவக்கி வைத்தார்.

இந்த மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு பில்லூர் 1, திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 



இதன் மூலம் 12-மற்றும், 19-வது வார்டுக்கு உட்பட்ட சதர்சன் அவின்யூ, அருணா லே அவுட், அபிராமி நகர், லட்சுமி தோட்டம், கிருபா இல்லம், ராக்காட்சி கார்டன் பகுதிகளில் உள்ள, 3221-இணைப்புகள் மூலம் பொதுமக்கள் பயன் பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிகழ்ச்சியில், துணை ஆணையர் சர்மிளா, துணை மேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட பொறுப்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மற்றும் அஞ்சுகம் பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...