கோவை ஈஷாவின்‌ வழிகாட்டுதலில்‌ இயங்கும்‌ ஸ்ரீவேலாயுதசாமி எஃப்‌.பி.ஏ.வின்‌ தேங்காய்‌ விற்பனை தொடக்கம்..!

ஈஷா அவுட்ரீச் அமைப்பின்‌ வழிகாட்டுதலில்‌ இயங்கும்‌ ஸ்ரீவேலாயுதசாமி எஃப்‌.பி.ஏ.வின்‌ தேங்காய்‌ விற்பனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.


கோவை: ஈஷா அவுட்ரீச்‌ அமைப்பின்‌ வழிகாட்டுதலில்‌ செயல்படும்‌ ஸ்ரீவேலாயுதசாமி உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனம்.‌ தனது முதல்‌ விற்பனையை (ஏப்ரல்‌ 29) வெற்றிகரமாக தொடங்கியது.



இந்நிறுவனத்தின்‌ இயக்குநர்களில்‌ ஒருவரும்‌ விவசாயியுமான புனிதன்‌ கோட்டத்தில்‌ விளைந்த ரூ.2.5 லட்சம்‌ மதிப்புமிக்க 10 டன்‌ தேங்காய்களை விற்பனைக்கு அனுப்பும்‌ நிகழ்ச்சி கிணத்துக்கடவில்‌ (ஏப்ரல்‌ 29) நடைபெற்றது.

இதில்‌ கோவை மாவட்ட ரோட்டரி கவனர்‌ ராஜசேகரன்‌ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில்‌ அவர்‌ பேசுகையில்‌, “இந்தியாவில்‌ மொத்தம்‌ 10 ஆயிரம்‌ உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்கள்‌ உள்ளன.

அதில்‌ 50-சதவீதம்‌ நிறுவனங்கள்‌ மஹாராஸ்டிரா மாநிலத்தில்‌ உள்ளன. அதற்கு அடுத்த‌ படியாக சுமார்‌ 700-உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்கள்‌ நம்‌ தமிழ்நாட்டில்‌ உள்ளன. இந்த எண்ணிக்கையை நாம்‌ இன்னும்‌ அதிகரிக்க வேண்டும்‌.

ஈஷாவின்‌ வழிகாட்டுதலில்‌ தொண்டாமுத்தூரில்‌ தொடங்கப்பட்ட வெள்ளியங்கிரி உழவன்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனம்‌ சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாறில அரசின்‌ விருதையும்‌ பெற்றுள்ளது. அதேபோல்‌, ஸ்ரீ வேலாயுதசாமி உழவன்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனம்‌ நன்கு வளர்ச்சி அடைந்து பல சாதனைகளை புரிய வேண்டும்‌. அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்‌” என்றார்‌.

இந்நிகழ்ச்சியில்,‌ ஸ்ரீ வேலாயுதசாமி உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனத்தின்‌ தலைவர்‌ நாராயணசாமி, வெள்ளியங்கிரி உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனத்தின்‌ தலைவர்‌ குமார்‌, ரோட்டரி சங்க செயலாளர்‌ ஸ்ரீராம்‌ உள்ளிட்டோரும்‌ பங்கேற்றனர்‌. கடந்த ஜனவரி மாதம்‌ தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில்‌ கிணத்துக்கடவு பகுதியைச்‌ சேர்ந்த 351 விவசாயிகள்‌ உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...