கோவை இளைஞர்களுக்கான கலை திறன் போட்டி - விண்ணப்பிக்க ஆட்சியர் கோரிக்கை.

கலைத்திறன் மிக்க கோவை மாவட்ட இளைஞர்கள் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் தெரிவித்துள்ளார். விவரங்களுக்கு, 0422-2610290 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


கோவை: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் வருகின்ற 8ம்தேதி நடைபெற உள்ளதால், ஆர்வமுள்ள இளைஞர்கள் பங்கேற்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் அறிக்கையில், தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை (17-35 வயதுடையவர்கள்) கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துகின்றவகையில், கலை போட்டிகள் நடத்தப்படவுள்ளது. 

இதில், 17 முதல் 35 வயதுடைய இளைஞர்களுக்கு குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் வருகின்ற மே எட்டாம் தேதி மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் 10 மணி அளவில் இந்தப் போட்டிகள் துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இசைக்கருவி

குரலிசை போட்டியிலும் நாதஸ்வரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்யம், மாண்டலின், கிதார், சாக்ஸ்ஸாபோன், கிளாரினெட் போன்ற கருவி இசைப்போட்டியிலும் வர்ணங்கள் ராகத்துடன் தமிழ் பாடல் இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம் எனவும் தாளக் கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல், ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் ஐந்து தளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும் பரதநாட்டியத்தில் வர்ணங்கள் மற்றும் தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிராமிய நடனம்

மேலும், கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளையாட்டம், ஒயிலாட்டம், கைசிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், புலி ஆட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமம் நடனங்கள் அனுமதிக்கப்படும் எனவும் குழுவாக பங்கேற்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓவியம்

ஓவிய போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஓவிய தாள்கள் வழங்கப்படும் எனவும் அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர் வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் பொருட்களை போட்டியாளர்கள் கொண்டு வர வேண்டும் எனவும் நடுவர்கள் கொடுக்கும் தலைப்புகளில் ஓவியங்கள் வரைய அதிகபட்சம் மூன்று மணி நேரம் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட அளவில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில அளவில் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கு அனுமதிக்கப்படுவர். எனவே, 

கலைத்திறன் மிக்க கோவை மாவட்ட இளைஞர்கள், வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும், விவரங்களுக்கு கலை பண்பாட்டுத் துறையின் கோவை மண்டல அலுவலக தொலைபேசி எண் 0422-2610290 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...