கோவையில் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் கோவிட் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.23 க்கு உட்பட்ட விமான நிலைய சாலை அருகே உள்ள செபாஸ்டியன் சர்ச் வளாகம், வடக்கு மண்டலம் 27 க்கு உட்பட்ட துரைசாமி லே-அவுட் பகுதியில் நடைபெற்ற சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், என்று மாநகராட்சி மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.