கோவை ரிலையன்ஸ் ஸ்மார்ட் பல்பொருள் அங்காடியில் ஆவின் பால் விலை ரூ.12 - பால் முகவர்கள் கண்டனம்…!

கோவையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவன அங்காடிகளில் அரை லிட்டர் ஆவின் பால் 22 ரூபாய்க்கு பதிலாக 12 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது, ஆவின் பால் முகவர்கள் சங்கத்தினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் ஆவின் பாலை, ரிலையன்ஸ் நிறுவனம் விலை குறைத்து விற்பனை செய்வதற்கு பால் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை உட்பட தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் ஸ்மார்ட் பல்பொருள் அங்காடிகளில், விற்பனைக்காக ஆவின் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிர்வாகம் சார்பில், பால் லிட்டருக்கு 44 ரூபாய் முதல் 47 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ரிலையன்ஸ் நிறுவன அங்காடிகளில் அரை லிட்டர் அவின் பாலை 22 ரூபாய்க்கு பதிலாக 12 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது, ஆவின் பால் முகவர்கள் சங்கத்தினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



இது குறித்து கூறிய முகவர்கள், ரிலையன்ஸ் நிறுவனம் அதிக லாபம் பார்க்கும் நிறுவனம் என்பதால், பால் விலையை குறைவாக கொடுப்பதாகவும், இதனால் பொதுமக்கள் தங்களது நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்புவதாகவும் தெரிவித்தனர்.

எனவே, இது குறித்து ஆவின் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினசரி பெறப்படும் பால், விற்பனையாகாமல் இருந்தால், அவை சேதமாவதை தடுக்க இது போன்ற சலுகையை அறிவித்து, இரவு வரை விற்பனை செய்வதாக, ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...