சேரன் மாநகர் அருகே டாஸ்மாக் கடை திறக்கப்படாது: மக்கள் கோரிக்கையை ஏற்று அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு!

விளாங்குறிச்சி ரோடு சேரன்மாநகர் மக்கள் கோரிக்கையை ஏற்று, உடனடியாக அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கக் கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை, விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது சேரன் மாநகர் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் குடியிருப்பு பகுதி. ஹோப் காலேஜ் முதல் விளாங்குறிச்சி வரை, இடைப்பட்ட பகுதிகளில் தற்போது செயல்பட்டு வரும் மதுபான கடைகளால் ஏற்கனவே மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில்,

பால்காரர் தோட்டம் பஸ் ஸ்டாப் அருகே புதிதாக டாஸ்மாக் மதுபான கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த ரோட்டில் மீண்டும் ஒரு டாஸ்மாக் கடையா? என்று அதிர்ச்சியில் இருந்த அபப்குதி மக்கள், உடனடியாக டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர்.

இதையடுத்து, 22வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு, பிரச்சனை குறித்து திமுக மாவட்ட செயலாளர் பையாகிருஷ்ணனிடம் தெரிவித்தார். இதையடுத்து, இருவரும் அமைச்சர் செந்தில் பாலாஜியியை நேரில் சந்தித்து பிரச்சனை குறித்து எடுத்துக் கூறினர்.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கக் கூடாது எனஅமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சரின் இந்த உத்தரவால், விளாங்குறிச்சி பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...