பொள்ளாச்சி அருகே சமையல் சிலிண்டர்கள் வெடித்து விபத்து - இளைஞர் 60 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

தீ விபத்தில் ஏற்பட்ட அதிக வெப்பத்தால், வீட்டில் இருந்த சுமார் 5 சமையல் சிலிண்டர்களில் 2 சமையல் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், உள்ளே இருந்த கிருஷ்ணன் உடலிலும் தீ பிடித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோவிந்தனூர் பாறைமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவருக்கு கிருஷ்ணன் (27) அஜித்குமார் (19) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில், கிருஷ்ணன் பொள்ளாச்சி ஜமீன்முத்தூர் தனியார் தோட்டத்தில் வாடகை வீட்டில் தங்கி பழைய துணிகளை தயாரிக்கும் வேலையை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் அவர் சமைத்துக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது, அங்கிருந்த வேஸ்ட் துணியில் எதிர்பாராதவிதமாக தீ பிடித்துள்ளது. தீ மளமளவென பரவியதால், துணிக் கழிவுகள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்து உள்ளது.



மேலும், வீட்டில் சுமார் 5 சமையல் சிலிண்டர்கள் இருந்ததாக தெரிகிறது. இந்த தீவிபத்தில் அதிக வெப்பத்தால் 2 சமையல் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், உள்ளே இருந்த கிருஷ்ணன் உடலிலும் தீ பிடித்துள்ளது. இதையடுத்து அங்கு இருந்தவர்கள் சென்று கிருஷ்ணனின் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



பின்னர், விரைந்து வந்த தீயணைப்பு துறையை தீயை அணைத்து உள்ளே இருந்த சிலிண்டர்களை வெளியே அகற்றினர். இந்த தீவிபத்தில் வீடு முழுமையான எரிந்தது. மேலும், 60 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணன் கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...