கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மண்டலத்தின் கூட்டம், மேற்கு மண்டல அலுவலகத்தில் கோவை மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தலைமையில் இன்று நடைப்பெற்றது.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மண்டலத்தின் கூட்டம், மேற்கு மண்டல அலுவலகத்தில் கோவை மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தலைமையில் இன்று நடைப்பெற்றது.

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள், மேற்கு மண்டல உதவி ஆணையர், உதவி நிர்வாகப் பொறியாளர் மற்றும் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட பொருள்கள் அனைத்துக்குமான ஒப்பந்தங்கள் 15 நாட்களுக்குள் செய்து முடிக்கப்படும், என மேற்கு மண்டல உதவி நிர்வாகப் பொறியாளர், தெரிவித்தார்.
மேலும், கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 17 வது வார்டு பகுதகளில், தெரு விளக்குகள் இல்லாததால் பாம்புகள், பூச்சிகள் போன்ற விஷ பூச்சிகளால் மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும், மேலும், குற்றங்கள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மருதாபுரம் பள்ளிக்கு, புது கட்டிடம் தேவை என்ற கோரிக்கையின் நிலை என்னவென்று கேள்வி எழுப்பிய, 37வது வார்டு மாமன்ற உறுப்பினருக்கு பதிலளித்த மாநகராட்சி அதிகாரி, தற்போது, கட்டிட பணிகளை மேற்கொள்வதால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால், சிறிது கால அவகாசம் எடுத்து கட்டிடம் கட்டுவதற்கான பணி துவங்கப்படும், என்று தெரிவித்தார்.
அதன் பின்னர், மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 39வது வார்டு மாமன்ற உறுப்பினர், மாதத்திற்கு 2 முறை மட்டுமே குடிதண்ணீர் விநியோகிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். அதற்கு பதிலளித்த அரசு அதிகாரி, குடிநீர் குழாய்களில் அழுத்தம் குறைவாக உள்ளதானாலும், 12 தொட்டிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளதாலும் குடிநீர் விநியோகம் தாமதம் ஏற்பட்டு வருவதாக, விளக்கம் அளித்தார்.
இவர்களை தொடர்ந்து பேசிய; 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கூறுகையில், குறுகலாக உள்ள அண்ணா வீதி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதால் அங்கு போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுகிறது. அதற்கான, தீர்வு என்னவென்று கேட்டால்? அதற்கு மாநகராட்சி அதிகாரிகளிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை, என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 43 வது வார்டில், வீட்டுகளில் உப்பு தண்ணீர் கனெக்சன் பெற 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையும், யூ.ஜி.டி அமைப்பதற்கு 1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை குடியிருப்போரிடம் பெற்றுள்ளனர், என குற்றம்சாட்டினார்.

அவரை தொடர்ந்து பேசிய 44 வது வார்டு மாமன்ற உறுப்பினர், "எங்களது பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காக்கள் அனைத்தும் குப்பை கிடங்காக மாறியுள்ளது. ஆகவே, வாரம் ஒரு முறை சுகாதார பணிகளை அங்கு கட்டாயம் மேற்கொள்ள வேண்டும், என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, இரண்டரை கோடிக்கு மேயர் வார்டில் பள்ளி அமைக்கப்பட்டு வருகின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், பாதாள சாக்கடை பணிக்காக தனி நபரிடம் பணம் வசூலிக்கின்றார், என குற்றம்சாட்டினார்.
தார்ச்சாலை அமைப்பதற்கு பணிகள் எப்போது துவங்கப்படும் என கேள்வி எழுப்பிய அவர், கொசு மருந்து நான்கு வீதிகளில் மட்டுமே அடிக்கப்படுகிறது, என்றும் தெரிவித்தார்.
இவரை தொடர்ந்து பேசிய 71 வது வார்டு மாமன்ற உறுப்பினர், ஆர்.எஸ் புரத்தில், 24/7 குடிநீர் சுயஸ் திட்டத்திற்காக தரமான குழாய் அமைக்கப்படவில்லை, என குற்றம்சாட்டினார்.
"சரவணம்பட்டியில் 97 குடும்பங்களுக்கான வீடுகள் குடிசைமாற்று வாரியத்தில் இருந்து அடுக்குமாடி குடியிருப்பாக வழங்கப்பட்டுள்ளது. முதல்வரிடத்தில் இருந்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையிலும், இவர்களுக்கு இன்றளவிலும் வீடு கொடுக்கப்படவில்லை", என 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
கூட்டத்தின் முடிவில், மாமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் சரிசெய்து தரப்படும், என மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தெரிவித்தார்.