கொடநாடு வழக்கு - கோவையில் ஜெயலலிதா நேர்முக உதவியாளரிடம் நடந்த 9 மணி நேர விசாரணை நிறைவு

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் 18 ஆண்டுகளாக நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த பூங்குன்றனிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார், இன்று கோவையில் விசாரணை மேற்கொண்டனர்.


கோவை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக இது வரை 200க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் 18 ஆண்டுகளாக நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த பூங்குன்றனிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார், இன்று விசாரணை மேற்கொண்டனர்.

கோவை காவலர் பயிற்சி பள்ளியில் காலை 9.30 முதல் மாலை 6.30 மணி வரை சுமார் 9 மணி நேரம் நடந்த விசாரணையில், பூங்குன்றனிடம் பல்வேறு முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் என்பதால், கொடநாடு குறித்த முழு தகவல்களை தெரிந்தவர் என்பதால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.

அடுத்ததாக, சஜீவனின் தம்பி, சுனில் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில், மீண்டும் பூங்குன்றனை நாளையும் விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...