கோவையில் தமிழ் மணமகனை கரம் பிடித்த ஆப்பிரிக்க பெண்; அம்மி மிதித்து இந்து முறைப்படி திருமணம்

கோவை துடியலூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ வெகு விமர்சையாக, தமிழ் மணமகனும், ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த மணமகளும், அம்மி மிதித்து, தாலிக்கட்டி திருமணம் செய்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ வெகு விமர்சையாக, கோவையை சேர்ந்த மணமகனும், ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த மணமகளும், அம்மி மிதித்து, இந்து முறைப்படி, தாலிக்கட்டி திருமணம் செய்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.



கோவில்பட்டியைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியம், தர்மலட்சுமி தம்பதியினர், இவர்களின் மகன் முத்துமாரியப்பன். 8 வருடங்களாக,

முத்துமாரியப்பன், மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கேம்ரூனிற்கு சென்று அங்கு தங்கிருந்து ஆயில் மற்றும் கேஸ் நிறுவனத்தில் சி.என்.சி. மெசின் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கும், அங்கு அதே நிறுவனத்தில் அக்கவுண்டண்டடாக பணியாற்றி வந்த எம்மா எஞ்சிமா மொசொக்கே என்பவரின் மகளான வால்மி இனாங்கா மொசொக்கே க்கும் இடையே காதல் ஏற்பட்டது. தொடர்ந்து, இருவரும் அவர்களது காதலை அவரவர் குடும்பத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இருவரின் வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த வால்மி இனாங்கா மொசொக்கே இந்தியாவிற்கு சென்று இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்ய வேண்டும் என தனது விருப்பத்தை அவரது வீட்டில் தெரிவித்துள்ளார்.

அவரது விருப்பத்திற்கு, பெற்றோரும், உறவினர்களும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, உறவினர்கள் 10 பேருடன் இந்தியா வந்து இன்று கோவை துடியலூர் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ வெகு விமர்சையாக இந்து முறைப்படி திருமணத்தை முடித்து வைத்தனர்.



இதில், மணமகளை பட்டுபுடவை கட்டி அவரது உறவினர்கள் மலர் பந்தலின் கீழ் ஊர்வலமாக மணமேடைக்கு அழைத்து வந்தனர்.



தொடர்ந்து, மந்திரங்கள் ஓத, ஆப்பிரிக்க மணப்பெண்ணான, வால்மி இனாங்கா மொசொக்கேவிற்கு, தமிழ் மணமகன் முத்துப்பாண்டி தாலி கட்டினார். தொடர்ந்து, இருவரும் மாலை மாற்றிக்கொண்டு, பின்னர் அம்மி மிதித்து மணபெண்ணுக்கு மெட்டி அணிவித்தார்.



பின்னர், கிறிஸ்தவ முறைப்படி இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்து கொண்டனர். இதனையடுத்து, உறவினர்களிடம் புதுமண தம்பதிகள் ஆசிபெற்றுக் கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...