கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 29-வது வார்டில் நீண்ட கால குடிநீர் குழாய் பழுது சரி செய்யப்பட்டது..!

29-வார்டுக்கு உட்பட்ட சத்தி தேசிய நெடுஞ்சாலை அருகில் நீண்டகாலமாக குடிநீர் குழாயில் (Main Line) ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. அதனை வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் நேரில் சென்று பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 29-வது வார்டில் பல காலமாக சரி செய்யப்படாமல் இருந்த குடிநீர் குழாயின் பழுது இன்று சரி செய்யப்பட்டது.

நேற்று கோவை மாநகராட்சி வடக்கு மண்டல கூட்டத்தில் 29-வது வார்டுக்கு உட்பட்ட சத்தி ரோடு அருகில் உள்ள முக்கிய குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு இருந்தது. இது குறித்துப் பல முறை புகார்கள் மக்கள் இடத்திலிருந்து கூறப்பட்டு வந்த நிலையில், இவை பல காலமாக சரி செய்யப்படாமல் இருப்பது குறித்து மாமன்ற உறுப்பினர்கள் நேற்று மாநகராட்சி அதிகாரிகளிடம் விவாதித்தனர்.

அப்போது வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட உதவி பொறியாளர் அதை உடனடியாக சரி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



அதனை தொடர்ந்து, தற்போது அந்த வேலை இன்று அதிகாலை முடிவடைந்து அப்பகுதியில் பழுதடைந்த குழாய் சரி செய்யப்பட்டது. 29-வார்டுக்கு உட்பட்ட சத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சூர்யா மருத்துவமனை அருகில் நீண்டகாலமாக குடிநீர் குழாயில் (Main Line) ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது.



அதை வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் நேரில் சென்று பார்வையிட்டார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...