திருப்பூர் பல்லடம் அருகே அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவி மயங்கி விழுந்து பலி..!

சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் மாணவியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் பல்லடம் அருகே அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவி மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.



இவரது மகள் நிதர்சனா (12). பொங்கலூர் காட்டூர் அரசு பள்ளியில் 7-வகுப்பு பயின்று வருகிறார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிதர்சனா திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார்.

உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் மாணவியை பொங்கலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவியை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



பல்லடம் அரசு மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...