இச்சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை வடவள்ளி அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி இவரது மனைவி ஜெகதாம்பாள் (67). இவர்களது மகன் சதீஷ்குமார்(33). வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று சதீஷ்குமார் வீரகேரளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு, பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு கிளம்பியதாக தெரிகிறது. அப்போது டாஸ்மாக் அருகே உள்ள சாலையில் வந்தபோது நிலை தடுமாறி சதீஷ்குமார் இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்துள்ளார்.
இதில், தலை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.