கோவை வால்பாறை நகராட்சி நகரமன்ற உறுப்பினர் மற்றும் எஸ்டேட் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்..!

டாடா காபி எஸ்டேட் பகுதியில் அரசு அறிவுறுத்தல் படி மக்கும் குப்பை, மற்றும் மக்காத குப்பைகள் சேர்த்து வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதை நகராட்சி ஊழியர்களால் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று எஸ்டேட் நிர்வாகம் தெரிவித்தது.


கோவை: வால்பாறைநகராட்சி நகரமன்ற உறுப்பினர் மற்றும் எஸ்டேட் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிஉட்பட 21-வார்டுகள் உள்ளது.இதில் 9,10-அட்டகட்டி, வால்பாறை ஆகிய வார்டுகள் தவிர அனைத்தும் தனியார் எஸ்டேட் பகுதிக்கு சொந்தமான இடமாகும்.

இதில், நகராட்சி சார்பாக வேலைகள் செய்வதற்கு எஸ்டேட் நிர்வாகம் சில நேரங்களில் தடையாக இருப்பதாகவும், எஸ்டேட் பகுதிகளில் உள்ள சாலைகளை புதுமை படுத்தவும், மின் விளக்குகள் அமைத்தல் மின் கோபுரங்கள் அமைத்தல் போன்ற வேலைகளுக்கு எஸ்டேட் நிர்வாகம் அவர்களுக்கு சொந்தமான சாலைகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலைகளை அரசுக்கு கொடுத்தல், அதற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்புதல் வழங்க படிவம் வழங்கி அதை மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

தண்ணீர் தொட்டி பேருந்து நிலையம் போன்றவைகளை பராமரிக்க நிர்வாகம் ஒப்புதல் செய்ய வேண்டும், டாடா காபி எஸ்டேட் பகுதியில் அரசு அறிவுறுத்தல் செய்யப்பட படி மக்கும் குப்பை, மற்றும் மக்கா குப்பைகள் சேகரித்து வைக்கப்பட்டுஉள்ளதாகவும், அதை நகராட்சி ஊழியர்களால் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று எஸ்டேட் நிர்வாகம் தெரிவித்தது.

மேலும், அனைத்து எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம்உள்ளதால் வனவிலங்கு மோதல் தடுக்க மின் விலக்கு அமைக்க வேண்டும் என்று எஸ்டேட் நிர்வாகம் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...