கோவையில் கொசுவர்த்தி சுருளால் தீ பிடித்து விபத்து - உடல் நலக்குறைவால் படுக்கையில் இருந்த மூதாட்டி பலி…!

சேலையில் தீ பிடித்து, உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் மூதாட்டியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


கோவை: கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அறிவொளி புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் இவரது மனைவி லட்சுமி (76). இவர் தனது மகள் ஜானகியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக உடல்நலக்குறைவால் லக்ஷ்மி, வீட்டில் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு லக்ஷ்மி படுத்து இருந்த இடத்தின் அருகே கொசுவர்த்தி சுருள் இருந்துள்ளது.

இதில், தெரியாமல் அவரது நைலான் துணி பட்டதில் தீப்பிடித்துள்ளது. இந்த தீ, உடல் முழுவதும் பரவிய நிலையில் லட்சுமி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து, அவரை மீட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

50 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...