கோவை மாநகராட்சியில் 6 நடமாடும் வாகனங்கள் மூலம் 100 வார்டுகளுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விற்பனைப் பொருள்களின் விலை அருகிலுள்ள உழவர் சந்தையின் விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களுக்கு விண்ணப்பிக்க மே 20ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் மற்றும் பழங்களைநேரடியாக வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் முறை கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் பயனுள்ளதாய் அமைந்தது. இந்நிலையில், அதனை சென்னை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் விரிவுபடுத்த "Farm to Home" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்துறை ஊக்குவிக்கும் பொருட்டு நடமாடும் வாகனங்கள் பெறுவதற்கு 40 சதவிகிதம் மானியம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி அரசு மூலம் வழங்கப்படும்.
அதன்படி, கோவை மாநகராட்சியில் 6 நடமாடும் வாகனங்கள் மூலம் 100 வார்டுகளுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விற்பனைப் பொருள்களின் விலை அருகிலுள்ள உழவர் சந்தையின் விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் வாகனங்கள் வாங்குவதற்கான மானியம் பெற பயனாளிகள் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு மூலம் தேர்வு செய்யப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தான், அதற்கான தகுதிகள்:
1 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. 21-45 வயது இருக்க வேண்டும்.
3. சொந்த/குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் நில உடமைச் சான்று, சிட்டா, அடங்கள் ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் சமர்ப்பிக்க வேண்டும்.
4. பயனாளிகளுக்கு ஒரு வாகனத்திற்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்,
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான, விண்ணப்பங்கள் பெறுவதற்கு மே 20ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுடைய, ஆர்வமுள்ள விவசாயிகள் இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தினை மாவட்ட வேளாண் துணை இயக்குனர்( வேளாண் வணிகம்), திருச்சி சாலை ராமநாதபுரம், கோயம்புத்தூர் அலுவலகம் அருகிலுள்ள உழவர் சந்தை அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து மே 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு 9865678453 என்ற எண் அல்லது [email protected] மூலம் தொடர்பு கொள்ளலாம், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.