கோவை சுண்டக்காமுத்தூரில் பரபரப்பு..! 50 ரூபாய் கொடுக்க மறுத்த உறவினருக்கு கத்திக்குத்து - ஒருவர் கைது…!

வெறும் ஐம்பது ரூபாய் கொடுக்க மறுத்ததால், உறவினரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற நபர்களால் சுண்டக்காமுத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அய்யாச்சாமி (65). இவரது இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள், திருமணம் முடித்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வசித்து வரும், அய்யாசாமியின் மூத்த மகன் மணிகண்டன், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தந்தையை பார்க்க கோவை வந்துள்ளார்.

அப்போது, மணிகண்டன் சுண்டக்காமுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, அவரது உறவினரான ராமசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுதர்சன் (50) என்பவர் மணிகண்டனிடம் 50 ரூபாய் பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், மணிகண்டன் பணம் தர மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சமாதானம் ஆகி இருவரும் அங்கிருந்து சென்றனர்.

இந்நிலையில், மீண்டும் சுதர்சன் தனது நண்பரான ராஜேந்திரன் என்கிற மாரிசாமி (48). என்பவருடன் அய்யாசாமியின் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு கொடுக்காததை கூறி, மணிகண்டனை வெளியே வரச்சொல்லி தகாத வார்த்தையில் சத்தம் போட்டுள்ளார். அப்போது வெளியே வந்த அய்யாசாமியிடம், சுதர்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அவருடன் வந்த ராஜேந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அய்யாச்சாமியை குத்தியுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன், ஓடிவந்து தடுத்தபோது அவருக்கும் கத்தி குத்து விழுந்துள்ளது. சம்பவத்தில், படுகாயமடைந்த மணிகண்டன் மற்றும் அய்யாசாமி, சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அய்யாச்சாமி அளித்த புகாரின் பேரில், ராஜேந்திரன் என்கிற மாரிசாமி (48) மற்றும் சுதர்சன் (50) இருவர் மீதும் பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரனை கைது செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வழக்கில் தொடர்புடைய, தலைமறைவாக உள்ள சுதர்சனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வெறும் ஐம்பது ரூபாய் கொடுக்க மறுத்ததால், உறவினரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற நபர்களால் சுண்டக்காமுத்தூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...