கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் தணிக்கை சீர்திருத்தக் குழு தலைவர் சுந்தரம் பிரபு மற்றும் குழு உறுப்பினர்களால் தணிக்கைத் துறை நடவடிக்கைகள் தொடர்பான சீர்திருத்த கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் தணிக்கை சீர்திருத்தக் குழுத் தலைவர் சுந்தரம் பிரபு., IAS (ஓய்வு) மற்றும் குழு உறுப்பினர்களால் மாநகராட்சி செயல்பாடுகள் மற்றும் தணிக்கைத் துறை நடவடிக்கைகள் தொடர்பான சீர்திருத்த கலந்தாய்வுக் கூட்டம் இன்று, ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநகராட்சியின் வருவாயை மேம்படுத்துவதற்கான திட்டங்களை ஆய்வு செய்து செயல்படுத்தவும், நிலுவையிலுள்ள சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணங்களை வசூலிக்கவும், சீரான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளவும், பல்வேறு துறைகளில் ஆக்கப்பூர்வமான முறையில் திறம்பட பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தணிக்கைத்துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையர் மரு.மோ.ஷர்மிளா, மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர், மாநகரப் பொறியாளர் (பொ) இராமசாமி, தணிக்கைத் துறை அலுவலர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.