ரயில்வே துறை வேலை: போலி ஆவணங்கள் கொடுத்து நூதன மோசடி - கோவையை சேர்ந்த நபர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்….!

ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்கள் கொடுத்து, நூதன மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.



கோவை: ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்கள் கொடுத்து, நூதன மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்நதவர் ஶ்ரீஜித் (28). பி.டெக் பட்டதாரி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வேலை தேடி கோவை வந்துள்ளார். அப்போது, கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள (நியூ ஜாப் பிளேஸ்மென்ட் சர்வீஸ்) என்ற தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தை வேலை நிமித்தமாக சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த முருகா என்பவர் ரயில்வே துறை டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.6 லட்சம் செலவாகும், என கூறியுள்ளார். மேலும், ஶ்ரீஜித்தை நம்ப வைக்க, இவர் மூலம் வேலை கிடைத்தவர்கள் என சில ஆவணங்களை காண்பித்ததாக தெரிகிறது. இதை நம்பிய ஶ்ரீஜித், வெளியே கடன் வாங்கி ரூ.6 லட்சம் பணத்தை முருகாவிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, சிறிது நாள் கழித்து, ஶ்ரீஜித்திற்க்கு கொல்கத்தாவில் வேலை கிடைத்துவிட்டதாகவும், பயிற்சி முடிந்தவுடன் பணியில் சேரலாம் எனக் கூறி கொல்கத்தாவிற்கு, அவரை முருகா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், மத்திய ரயில்வே துறையின் பணியானை மற்றும் அடையாள அட்டையை, ஶ்ரீஜித்திற்க்கு வழங்கியுள்ளார்.

இதையடுத்து, அங்கு தனியாக அறையெடுத்து தங்கிய நிலையில், தினமும் யாராவது ஒரு நபர் இவர்களது அறைக்கே வந்து ரயில்வே துறையில் பணியாற்றுவது தொடர்பாக பயிற்சி வழங்கியுள்ளனர். இதையடுத்து, நீண்ட நாட்களாக ஊதியமும், பணியில் சேராமலும், வருகை பதிவேட்டில் கையெழுத்து ஏதும் வாங்காததல் சந்தேகமடைந்த, ஶ்ரீஜித், இது குறித்து முருகாவிடம் விசாரித்துள்ளார்.

அப்போது அவர், தமிழகத்திற்கு பணிமாறுதல் செய்ய ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறி தொடர்ந்து ஶ்ரீஜித்தை ஏமாற்றியுள்ளார். மேலும், கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என கூறி சொந்த ஊருக்கு அவரை அனுப்பியுள்ளார். ஆனால், அதற்கு பின் தொடர்பு கொண்ட போது முருகா போனை எடுக்காமல் வேண்டுமென்றே விலகி சென்றுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ஶ்ரீஜித் விழுப்புரம் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் அழைத்து விசாரித்த போது பணத்தை திரும்ப தருவதாக கூறியுள்ளார். அதன் பிறகு, சிறு தொகையை மட்டும் திருப்பி கொடுத்த நிலையில், மீண்டும் போனை எடுக்காமலும், பணத்தை கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, விசாரித்த போது அவர் ஏற்கனவே இதே போல் விழுப்புரத்தை சேர்ந்த மேலும் பலரிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அனைவரும் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதில், மத்திய ரயில்வே வேலை எனக் கூறி போலியாக பணியாணை, அடையாள அட்டை உள்ளிட்ட வழங்கி மோசடியில் ஈடுபட்ட முருகா என்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும், என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதே போல், விழுப்புரத்தை சேர்ந்த பெண்ணிடமும் மத்திய அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.5 லட்சம் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணும் தனது குழந்தையுடன் வந்து மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...