கோவை பேரூரில் நடந்த 'முப்பெரும் விழா' - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு..!

பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற சுபகிருது ஆண்டு பிறப்பு, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள், 75-ஆம் ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா என்ற முப்பெரும் விழாவில் தெலுங்கானா மாநில ஆளுநர் கலந்து கொண்டார்.



கோவை: கோவை பேரில் நடந்த முப்பெரும் விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

கோவை பேரூர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற சுபகிருது ஆண்டுப்பிறப்பு, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள், 75 ஆம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா என்ற முப்பெரும் விழாவில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டுள்ளார்.



இதில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், கெளமார மடாலயம் குமரகுருபர அடிகளார் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். முன்னதாக பேரூர் வந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும் போது:-



தமிழ் வணக்கம் என்று கூறி உரையைத் துவக்கினார். தமிழ் என்ற அழைப்பு வரும் போது தமிழிசை அங்கே இருப்பேன் என தெரிவித்த அவர், ஒரு ராமசாமி மட்டும் தமிழர்களுக்கும், தமிழுக்கும் தொண்டு செய்யவில்லை. இங்கே உள்ள சாந்தலிங்க ராமசாமி அடிகளாரும் தமிழுக்கு தொண்டாற்றி உள்ளார்.

அதே போல் 75 -ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை ஓராண்டு கொண்டாட உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். ஆன்மீகம் தான் தமிழ் வளர்ச்சிக்கு உதவியது என கூறிய அவர் எல்லா மடங்களுக்கும் செல்லும் பழக்கம் எனக்கு இருக்கிறது.

அங்கு என்ன பழக்கங்கள் இருக்கிறதோ அதை நான் ஏற்றுக் கொள்வேன் என தெரிவித்தார். ஆனால் இதை மாற்றி எழுதுகின்றனர். தமிழிசை செல்லும் இடத்தில் திரித்து எழுதுகின்றனர். என் மனதில் இருப்பது மக்கள் சேவை, ஆன்மீக சேவை மட்டுமே, கருத்தைமட்டுமே பேசுபவர்கள், காவியின் கருத்தையும்அறிய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.



அரசு மடாலயங்களை அழைத்து பேசும் போது, அவர்களுக்கு உரிய இருக்கைகளை அமைத்து கொடுக்க வேண்டும். காவி ஆன்மீகத்தை குறிக்கிறது. அதனால் தான் காவி தமிழகத்தில் பெரியது, நம்மால் முடிந்ததை ஆதீனங்களுக்கு செல்வமாக, தானமாக வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

நான் ஒரு நேர்மையான அரசியல்வாதி, பணமதிப்பிழப்பின் போது எந்த பிரச்னையும் வரவில்லை, மோடி எங்களுக்கு சொல்லவுமில்லை. எங்களிடம் கருப்பு பணமும் இல்லை என தெரிவித்தார்.

மடாலயங்கள் மூலமாக நடத்தப்படும் கல்வி நிலையங்களுக்கு சிறப்பு கவனத்தை அரசு செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்த அவர் அப்போது தான் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவ முடியும் என தெரிவித்தார்.

ஆளுநர்களுக்கு ஆளுமை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனாலும் ஆளுநர்களும் சாமானிய மக்களில் ஒருவர் தான் என தெரிவித்தார்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...