கோவை மாநகராட்சி வடக்கு மண்டல முதல் கூட்டம் : 'புரோசோன் மால்' பார்கிங் கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை..!

பார்க்கிங் கட்டணம் இல்லை என்றால் சாலையில் யாரும் வாகனங்களை நிறுத்தி செல்ல மாட்டார்கள், இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது என வடக்கு மண்டல முதல் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்களின் முதல் கூட்டம் வடக்கு மண்டல அலுவலகத்தில் துவங்கியது.

மாநகராட்சி மேயர்கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சனைகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.



அப்போது பேசிய 11-வது வார்டு கவுன்சிலர் பழனிச்சாமி என்கிற சிரவை சிவா மாநகராட்சி வார்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.5-லட்சம் நிதியை ரூ.10-லட்சமாக உயர்த்த வேண்டும்,அதேபோல் தனது வார்டில் கடந்த இரண்டு வருடமாக குடிநீர் பிரச்சனை பிரதான பிரச்சினையாக இருப்பதால் இப்போது லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் 10-லிருந்து 12-நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது. அதே போல் வார்டுகளில் உள்ள பெரும்பாலான குழாய்கள் உடைந்த நிலையில் மிக மோசமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட குழிகள் இன்னும் சரி செய்யாமல், சாலைகள் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது வார்டில் இரண்டு தார் சாலைகள் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். மேலும் 11-வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் விளாங்குறிச்சி வரை செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், தற்போது இரண்டு துணை ஆரம்ப சுகாதார நிலையம் வந்துள்ளதாகவும், மேலும் ஒரு சுகாதார நிலையம் வர உள்ளதாக தகவல் வந்துள்ளது.



எனவே அதற்கு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். அதேபோல் சரவணம்பட்டி சாலையிலுள்ள ப்ரோசோன் மால் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய கூடாது என ஏற்கனவே மாமன்றத்தில் கேட்டதாகவும், அதன் நிலை என்ன என கேட்டிருந்தார்.

பார்க்கிங் கட்டணம் இல்லை என்றால் சாலையில் யாரும் வாகனங்களை நிறுத்தி செல்ல மாட்டார்கள், இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. வேறு மாநிலங்களில் இம்மாதிரி பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உள்ளனர்.

எனவே பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என தெரிவித்தார். ஒரு வணிக வளாகம் வைத்திருந்தால் அவர்கள் கட்டாயமாக பார்க்கிங் வைத்திருக்க வேண்டும் என்பது உத்தரவு. ஆனால் கட்டணம் வசூல் செய்யும் முடிவை அந்த நிறுவனமே எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து மேயர் கூறும்போது இதுகுறித்து தீர்மானமாக போட்டு பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பரிசீலனை செய்யலாம் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், துணை மேயர் வெற்றிச் செல்வன், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...