கோவை சூலூர் அருகே சாலையிலிருந்த பள்ளத்தால் நிலைதடுமாறிய வாகன ஓட்டி அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி..!

இதையடுத்து அங்கு வந்த சூலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவை சூலூர் அருகே சாலையில் சென்ற இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் காளியப்பன் (25). இவர் கோவை கோவில்பாளையத்தில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டு மீண்டும் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி வந்துள்ளார்.

அப்போது சூலூர் ரங்கநாதபுரம் அருகே வந்தபோது சாலையில் இருந்த பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கி உள்ளார். இதில் இரு சக்கர வாகனம் பள்ளத்தில் இறங்கியதில் நிலை தடுமாறி விழுந்த அவர் மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து ஏறியது.



இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காளியப்பன் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அங்கு வந்த சூலூர் போலீசார் காளியப்பன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...