நூல் விலை உயர்வு.. பஞ்சு பதுக்கலை தடுக்க கோரி கோவை சாஸ்தா டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் சாஸ்தா எம் ராஜா கோரிக்கை..!

உள்நாட்டு பதுக்கல் பேர்வழிகளால் பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ.90 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பஞ்சு ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30 வரை முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


கோவை: இந்தியாவில் பஞ்சு பதுக்கி வைத்து உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை சாஸ்தா டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக நாடு முழுவதும் அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்துறையில் விளங்குகிறது. இந்திய ஜவுளி தொழில் கட்டமைப்பில் மூன்றில் ஒரு பங்கு தமிழகம் கொண்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

இத்தகைய முக்கியத்துவம் பெற்ற ஜவுளி தொழில் மற்றும் அதன் சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் பஞ்சு விலை ஏற்றத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

356-கிலோ பஞ்சு கொண்ட ஒரு கேண்டி (Candy) பஞ்சு விலை சமீபத்தில் 95-ஆயிரம் ரூபாயாக உயர்ந்து புதிய வரலாறு படைத்தது.

இந்த அபரிமிதமான விலை உயர்வு ஒட்டுமொத்த ஜவுளித் தொழில்களையும் முடக்கும் என்ற அபாய நிலை ஏற்பட்ட காரணத்தால் ஜவுளி தொழில்துறையினர் ஒன்றினைந்து சமீபத்தில் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து பிரச்சினை குறித்து எடுத்துக் கூறினர்.

தொடர்ந்து பஞ்சு இறக்குமதிக்கான 11-சதவீத வரியை நீக்கினால் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்தனர். இதையடுத்து மத்திய அரசும் உடனடியாக பஞ்சு இறக்குமதிக்கான வரியை செப்டம்பர் 30 வரை முற்றிலும் நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நாட்டில் உள்ள அனைத்து ஜவுளி தொழில் துறையினர் மத்தியிலும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பஞ்சு விலை குறையத் துவங்கும் என எதிர்பார்த்து காத்திருந்த தொழில் துறையினருக்கு அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியுள்ளது.

காரணம் இன்றும் பஞ்சு விலை ஒரு கேண்டி 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்பிரச்சினையின் பின்னணி குறித்து தொழில் துறையினர் தெரிவித்துள்ள கருத்து மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்:-

கோவை சாஸ்தா டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் சாஸ்தா எம் ராஜா கூறியதாவது:-

ஜவுளி தொழில் கொண்டுள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து மத்திய அரசு பஞ்சு இறக்குமதிக்கான வரியை முற்றிலும் நீக்கி உள்ளது. இருப்பினும் பஞ்சு விலை குறைந்தபாடில்லை. இதற்கு 2 முக்கிய காரணங்கள் உள்ளன. சர்வதேச மற்றும் இந்தியாவில் உள்ள வர்த்தகர்கள் ஒரு முக்கிய காரணமாக உள்ளனர்.

மற்றொன்று இந்தியாவில் உள்ள பிரபல அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் பிரபல விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் பஞ்சு விற்பனை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் மிக அதிக அளவு பஞ்சை உள்நாட்டில் பதுக்கி வைத்துள்ளனர். இதன் காரணமாகவே மத்திய அரசு இறக்குமதி வரியை நீக்கியும் பஞ்சு விலை எதிர்பார்த்த அளவு குறையாமல் உள்ளதற்கு முக்கிய காரணமாகும்.

பிரச்சனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மத்திய அரசு உடனடியாக இந்தியாவில் பஞ்சு பதுக்கி வைத்து உள்ளவர்களை கண்டறிந்து உடனடியாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர பஞ்சு ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30 வரை முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு செய்தாலே இந்தியாவில் தற்போது பதுக்கி வைக்கப்பட்டுள்ள மொத்த பஞ்சு அனைத்தும் மார்க்கெட்டுக்கு வந்துவிடும். இதனால் பஞ்சு விலையும் கணிசமாக குறையும். இன்றைய சூழ்நிலையில் வெளிநாட்டில் இருந்து பஞ்சு அதிக அளவு இறக்குமதி செய்வதற்கு தொழில் துறையினர் ஆர்வம் காட்டுவதில்லை இதற்கு சர்வதேச சந்தையிலும் பஞ்சு விலை அதிகம் உள்ளதே காரணமாகும்.

அங்கும் இடைத்தரகர்கள் ஆக செயல்படும் வர்த்தகர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எதிர்வரும் நாட்களில் மத்திய அரசு இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் ஒட்டு மொத்த ஜவுளி தொழிலும் மிக கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...