கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் சாலையில் மோதிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்..!

சமீப காலமாக பள்ளி மாணவர்கள் இது போன்று செயல்களில் ஈடுபடும் வீடியோக்கள் அதிகமாக வெளியாகி வருவது, பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது



கோவை: கோவை கோவையில் அரசுபள்ளி மாணவர்கள் சாலையில் மோதிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகில் இரு தினங்களுக்கு முன்அரசு பள்ளி மாணவர்கள்இரு குழுக்களாக பிரிந்து மோதிக்கொண்டுள்ளனர். மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால், பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பேருந்து நிறுத்ததில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் நின்று கொண்டு இருந்த போது, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிமாணவர்கள் மோதிக் கொண்டதால் மாணவிகளும் அதிர்ச்சி அடைந்துஒதுங்கி நின்றனர். மாணவர்கள், இரு பிரிவினர்களாக பிரிந்து தாக்கிக் கொண்டதைசாலையில்காரில் சென்ற நபர் ஒருவர் செல்போனில்பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது, அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

மேலும், மோதல் நடந்த போதே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக பள்ளி மாணவர்கள் இது போன்று செயல்களில் ஈடுபடும் வீடியோக்கள் அதிகமாக வெளியாகி வருவது, பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...