கங்கா மருத்துவமனை, கோவை ரோட்டரி மெட்ரோபாலிஸ் கிளப் இணைந்து மார்பக புற்றுநோய் கண்டறியும் நவீன கருவிகளுடன் கூடிய பேருந்து அறிமுகம்

ஆரம்ப கால மார்பக புற்றுநோய்‌ மற்றும்‌ சர்க்கரை நோயினால் ஏற்படும் பாத பிரச்சினைகளை கண்டறிய நவீன கருவிகளுடன்‌ கூடிய பேருந்தை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.


கோவை: கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையும்,‌ கோவை ரோட்டரி மெட்ரோபாலிஸ்‌ கிளப், இணைந்து மார்பக புற்று நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிய தரம் வாய்ந்த ஹோலோஜிக் மேமோகிராபி (Hologic Mammography) பிராஜக்ட்‌ சக்தி (Project Shakti) மற்றும் சர்க்கரை நோய் பாத பிரச்சினைகளை அரம்பத்தில்‌ கண்டறிந்து கால் இழப்பை தடுத்தல் (Project Walk For Life) ஆகிய இந்த இரு திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்வதற்காக அதிநவீன கருவிகள்‌ கொண்ட பேருந்தை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.



இந்த விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன் இவ்விரு திட்டத்தையும் துவக்கி வைத்து உரையாற்றினார்.

Project Shakti, குறித்து கங்கா மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர்‌ டாக்டர்‌ ராஜா ஷண்முக கிருஷ்ணன் கூறியதாவது:-

பிராஜக்ட்‌ சக்தியின் (Project Shakti)‌ மூலம்‌ ஆரம்ப கால மார்பக புற்றுநோயை கண்டறிந்து அதற்கு சரியான தருணத்தில்‌ மருத்துவ சிகிச்சையளித்து பெண்களின்‌ உயிர்களை காப்பாற்றுவது தான் அதன் நோக்கமாகும். மார்பக புற்றுநோய்‌ பெண்களிடையே, மிக சாதாரணமாக அதிகரித்து வருகிறது. இதை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்தால்‌ உடனடியாக குணப்படுத்தலாம்‌. ஆனால்‌, இந்தியாவில்‌ அதிக அளவில்‌ மார்பக புற்றுநோய்‌ கடைசி நேரத்தில்‌ கண்டறியப்பட்டு குணப்படுத்த முடியாமல்‌ நோயாளிகள்‌ இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காகவே இந்த பிராஜக்ட சக்தி (Project Shakti) திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில்‌, அதிநவீன கருவிகள்‌ கொண்ட இந்த பேருந்தின்‌ மூலம்‌ பல இடங்களில்‌ மருத்துவ முகாம்கள்‌ நடத்தப்பட்டு, வருகிற 18 மாதத்தில்‌ 1500 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்படும்‌. இதனால்‌, பெண்களிடையே மார்பக புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதுடன்‌, ஆரம்பகால மார்பக புற்றுநோய்‌ பாதித்த நோயாளிகளை கண்டறிய முடியும். இதுதுவிர, இத்திட்டத்தினால்‌ கண்டறியப்படும்‌ நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்‌.

இதில்‌, கண்டறியப்பட்ட மார்பக புற்றுநோய்‌ நோயாளிகளுக்கு தேவைப்படுகிற பரிசோதனைகளான அறுவை சிகிச்சை, கீமோதரபி, ரேடியோதெரபி மற்றும்‌ மார்பக மறுசீரமைப்புகள்‌ செய்யப்படும்‌. இந்த திட்டத்தின்‌ மூலம்‌ மார்பக புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதோடு அவர்களுக்கு இலவச சிகிச்சைகள்‌ அளித்து காப்பாற்றப்படும்‌.

தொடர்ந்து, கங்கா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராஜ சபாபதி “Project Walk for Life” பற்றி விளக்கும்போது கூறியதாவது:-

"Project Walk for Life", திட்டத்தின் மூலம்‌ சர்க்கரை நோயினால்‌ ஏற்படும்‌ பாத புண்களை கணடறிந்து தேவையான சிகிச்சைகளை‌ அளித்து குணப்படுத்துவதால்‌, கால்‌ துண்டிப்புகள்‌ தவிர்க்கப்படுகிறது. சர்க்கரை நோய்‌ இந்தியாவில்‌ அதிக அளவில்‌ உள்ளது. மேலும்‌, சர்க்கரை நோயினால்‌ அவர்களுடைய பாதத்தின்‌ உணர்ச்சிகளை அறிய முடிவதில்லை.

இதனால்‌, அவர்களுடைய கால்‌ புண்ணால் ஏற்படும்‌ வலியை உணராமல்‌, புண்கள்‌ முற்றி கால்‌ துண்டிக்கப்படும்‌ அளவிற்கு செல்கிறது. இந்த திட்டத்தின்‌ மூலம்‌ 1800 சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச பரிசோதனைகள் செய்து தேவைப்படும்‌ நோயாளிக்கு எக்ஸ்ரேக்கள் எடுக்கப்படும்.‌ இதில்‌, நோயாளிக்கு கால புண்கள்‌, கண்டறியப்படுமாயின் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அனைத்தும்‌ இலவசமாக அளித்து கால் துண்டிப்பு தவிர்க்கப்படும்.



மேலும், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற பரத் பாண்டியா, பிரிகால் தலைவர் வனிதா மோகன், மில்கி மிஸ்ட் இயக்குனர் அனிதா சதீஷ்குமார் மற்றும் ரோட்டரியின் சுந்தரவடிவேல் ஆகியோர் உரையாற்றினார்கள்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...