கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி சஜீவனிடம் இரண்டாவது நாளாக விசாரணை…!

கோடநாடு பங்களா உள் அலங்கார வேலைகளை செய்தவர் என்பதால் உள்ளே முக்கிய கோப்புகள் உள்ள இடங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளதால், இவர் கனகராஜூக்கு சொல்லிருக்கலாம் என்ற கோணத்தில் தான் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் முதல் மறு விசாரணை நடந்து வருகிறது.

ஐ.ஜி.சுதாகர் தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சசிகலா, அவரது உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ வி.சி.ஆறுகுட்டி, கோடநாடு மேலாளர் நடராஜன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் அதிமுக வர்த்தக அணி தலைவர் சஜீவனிடம் நேற்று ஐ.ஜி. சுதாகர் தலைமையில் நேற்று சுமார் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது நாளாக சஜீவனிடம் தனிப்படை போலீசார், கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சஜீவன் கோவையில் நீலகிரி பர்னிச்சர் என்ற பெயரில் மரசாமான்கள் விற்பனை கடையை வைத்திருந்தார். மேலும் அவர் தான் கோடநாடு பங்களா உள் அலங்கார வேலைகளை செய்தவர் என்பதால் உள்ளே முக்கிய கோப்புகள் உள்ள இடங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளதால், அவர் கனகராஜூக்கு சொல்லிருக்கலாம் என்ற கோணத்தில் தான் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவிடமிருந்து கனகராஜ் வேலை விட்டு சென்ற பின் அவருடன் எந்த தொடர்பும் இல்லை சஜீவன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...