திருப்பூரில் கட்டிட வேலைக்கு சென்ற இடத்தில் கொள்ளை: பணத்தை பறிகொடுத்த ஏற்றுமதியாளர் வீட்டில் வருமான வரித்துறை விசாரணை..!

தன் வீட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது கூட தெரியாமல் இருந்த ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் காவல்துறை விசாரணை மட்டுமல்லாது வருமான வரித்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் கட்டிட வேலைக்கு சென்ற இடத்தில் கொள்ளையடித்த தொழிலாளர்களை கைது செய்த காவல்துறை பணம் மற்றும் சொகுசு கார்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள குள்ளே கவுண்டம்பாளையத்தில் சேர்ந்தவர் துரைசாமி. திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவன வளாகத்திலேயே இவரது வீடும் உள்ளது. மூன்று மகள்கள் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில் அவரது வீட்டில் துரைசாமி மற்றும் மனைவி தனலட்சுமி மட்டுமே வசித்து வருகின்றனர்.

இவர்கள் வீட்டுக்கு எதிரே துரைசாமிக்கு சொந்தமான பழைய வீடு உள்ளது. அது பயன்படுத்தப்படாத நிலையில் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி பழைய வீட்டில் இரண்டு சவரன் நகை ஒன்றரை லட்சம் பணம் கொள்ளை அடிக்க பட்டதாக துரைசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இவ்வழக்கு தொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சதீஷ் அவரது தம்பி சக்தி தொழிலாளர்கள் தாமோதரன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.



விசாரணையின் போது தான் காவல்துறையினருக்கு பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. நால்வரையும் கைது செய்த காவல்துறையினர் இவர்களிடமிருந்து 30-சவரன் நகை 16-லட்சம் ரூபாய் பணம் 2-சொகுசு கார் இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் பல சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தும் போது கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக சதீஷ் மற்றும் தொழிலாளர்கள் கட்டிட வேலைக்கு சென்ற போது பழைய வீட்டில் ஒரு அறையில் கட்டுக்கட்டாய் பணம் மூட்டை கட்டி இருந்துள்ளது இதனை கண்டு சிறிதளவு பணத்தை தொழிலாளர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது துரைசாமிக்கு தெரியாமல் இருந்திடவே மீண்டும் இரண்டு முறை இதேபோல் கட்டிட வேலைக்கு சென்ற போது பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மூன்றாவது முறையாக ஜனவரி மாதம் அந்த அறையில் பணம் குறைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த துரைசாமி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரில் ஒன்றரை லட்சம் பணம் மற்றும் இரண்டு சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளித்திருந்தார். இதன் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்தபோது தான் சந்தேகம் அடைந்த கட்டட வேலைக்கு வந்த நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் மூன்று முறை பணம் கொள்ளை அடித்து இருந்தது தெரிய வந்தது அதன் மொத்த மதிப்பு 2-கோடி ரூபாய் வரும் என தெரிவித்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தில், மூன்று மாதங்களாக திருப்பூர், திருவண்ணாமலையில் ஜாலியாக செலவு செய்து, சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளனர்.

சகோதரர்கள் சதீஷ், சக்தி ஆகியோர் திருவண்ணாமலையில், புதிய கார், புல்லட் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு பேரும், வீரபாண்டி, கணபதிபாளையம், மங்கலம் ரோடு ஆகிய இடங்களில், ஆளுக்கொரு வீடுகளை, இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கியுள்ளனர்.

காவல்துறையினர் பிடிபட்ட கொள்ளையர்களிடம் இருந்து தற்போது 30-சவரன் நகை 16-லட்ச ரூபாய் பணம் சொத்து ஆவணங்கள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்த நிலையில் தன் வீட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது கூட தெரியாமல் இருந்த ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் துரைசாமியிடம் காவல்துறை விசாரணை மட்டுமல்லாது வருமான வரித் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...