நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய இளைஞர் மீது குற்ற விசாரணை நடைமுறை சட்டம் 122-ன் படி ஓராண்டு காலம் தடுப்புக்காவலில் வைக்க நிர்வாக செயல்துறை நடுவர் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் உத்தரவின்படி தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவையில் நன்னடத்தை ஆவண கட்டுப்பாட்டை மீறிய இளைஞரை ஒரு வருடம் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டம் சிவானந்தா காலனி, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் என்கிற தமிழா (20). இவர் மீது ரத்தினபுரி, காட்டூர் மற்றும் கோவில்பாளையம் காவல் நிலையங்களில் அடிதடி மற்றும் கொலை வழக்குகள் உள்ளது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி தீபக் மாவட்ட நிர்வாக செயல்துறை நடுவர் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் ஆகியோர் முன்னிலையில் ஆஜராகி வரும் 110 சட்டப்பிரிவின் படி ஒரு வருடத்திற்கு பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபட மாட்டேன் என பிணை ஆவணம் எழுதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 25-ஆம் தேதி தீபக் அவரது சக நண்பர்களான சூரியா, கருப்பு சூரி மற்றும் விக்கி ஆகியோருடன் இணைந்து மதுரை மாவட்டத்தை சேர்ந்த சபரீஸ், என்பவரை அடித்து, கொலை மிரட்டல் விடுத்தது, கத்தியை காட்டி அவரது இருசக்கர வாகனத்தையும் பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சபரீஸ் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீபக்கை கடந்த மார்ச் 31-ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், ஒரு வருட காலத்திற்கு நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய தீபக் மீது குற்ற விசாரணை நடைமுறை சட்டம் 122-இன் படி ஓராண்டு காலம் தடுப்புக்காவலில் வைக்க நிர்வாக செயல்துறை நடுவர் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் உத்தரவின்படி தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.