'ஆப்ரேஷன் 2.0'.. திண்டுக்கல்லை சேர்ந்த கஞ்சா வியாபாரியை கோவையில் போதை பொருள் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு காவலில் வைக்க உத்தரவு…!

அவரிடம் இருந்து 7.255-கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: ஆப்ரேஷன் 2.0 என்ற பெயரில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை உத்தரவிட்டதன் பேரில், கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 30-ஆம் தேதி கோவை காட்டூர் முனியப்பன் கருப்பசாமி கோவில் பின்புறம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்த ஜெகநாதன் (41) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 7.255-கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜெகநாதனை போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் ஓராண்டு தடுப்புக் காவலில் வைக்க கோவை காட்டூர் சரக உதவி ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் பரிந்துரை செய்தனர்.

அதையடுத்து மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில் ஜெகநாதன்ஒரு ஆண்டு காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...