முன்விரோதம்... முற்றிய வாக்குவாதம்... கோவையில் இரு தரப்பினரிடையே மோதல்: இளைஞர் குத்திக்கொலை…!

மேலும், ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை உக்கடம் அருகே முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (34), சுரேஷ் (28), வசந்த் (32), பிரகாஷ் (32), தரப்பினருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி (23), சூர்யா (28), சுரேஷ் (29), சுபாஷ் (23), பாஸ்கரன் (23) தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று சந்தோஷ் தரப்பினர் உக்கடம் பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்து வழிமறித்த முத்துப்பாண்டி தரப்பினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

அது கைகலப்பாக மாறிய நிலையில் முத்துப்பாண்டி தரப்பினர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தோஷ் மற்றும் சுரேஷ் வயிற்றில் குத்தி உள்ளனர். இதை பார்த்த வசந்த், பாஸ்கரன் அங்கிருந்து ஓடியுள்ளனர்.



இதையடுத்து, முத்துப்பாண்டி தரப்பினர் அங்கிருந்து தப்பிய நிலையில், சந்தோஷம் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஆபத்தான நிலையில், சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...