கோவை பெரியகடை வீதியில் உள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள டெண்டர் கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பினர் பாத யாத்திரை செல்ல முடிவு செய்துள்ளனர்.
கோவை: கோவை பெரிய கடை வீதியில் செயல்பட்டு வரும் டி.கே.மார்க்கெட் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலையோர கடைகளை அமைத்து சிறு வியாபாரிகள் காய்கறி பழங்கள் வியாபாரம் செய்து வந்தனர்.
ஆனால், சாலையோர கடைகள் செயல்பபட, மார்க்கெட்டில் கடைகள் ஏலம் எடுத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததையடுத்து, அப்பகுதியில், காலியாக இருந்த இடத்தில் கடைகள் அமைத்து தருவதாக முந்தைய அதிமுக ஆட்சியின் போது உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், கடைகளை வியாபாரிகளுக்கு வழங்குவதற்கு முன்பு, தேர்தல் அறிவிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் நடைபெற்றதால், கோவை மாநகராட்சி சார்பில் அக்கடைகளை டெண்டர் மூலம் எடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுகுறித்து, கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த காய்கறி சிறு வியாபாரிகள் கூட்டமைப்பினர், ஓராண்டாக தொழில் செய்ய முடியாமல் 88 வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினர் சிரமத்திற்கு உள்ளாகி வருவதால், டெண்டர் கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும், இது தொடர்பாக, மாநகராட்சி ஆணையரை சந்திக்க சென்ற போது, ஆணையர் அவதூறாக பேசி தங்களை வெளியேற்றியதாக குற்றம் சாட்டினர்.

எனவே, கடைகளை தங்களுக்கு ஒதுக்க கோரி வருகிற மே மாதம் 5ம் தேதி கோவை அண்ணா சாலையிலிருந்து, சென்னை அண்ணா சமாதிக்கு, குடும்பத்தினருடன் பாத யாத்திரையாக சென்று முதலமைச்சரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

முன்னதாக வரும் 30ம் தேதி கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, தெரிவித்தனர்.