கோவையில் காணாமல் போன சிறுவனைக் கண்டுப் பிடித்த காவலருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!

வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல் போன 12 வயது சிறுவனை கண்டுபிடித்த காவலரின் திறன்மிகு செயலை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவருக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளார்.


கோவை: கோவையில் காணாமல் போன 12 வயது சிறுவனைக் கண்டுப் பிடித்துக் கொடுத்த காவலருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுவன் செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கடந்த 13ம் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வராததால், வடவள்ளி காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர்.

புகாரின் அடிப்படையில், துரிதமாக செயல்பட்டு மதுரையில் இருந்த சிறுவனை மீட்ட முதல் நிலை காவலர் கோட்டை சேகரின் (GrI 1186) திறன்மிகு செயலை பாராட்டும் விதமாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இச்செயல் மற்ற காவலர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக, காவலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...