கோவை ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் 13-ஆம் ஆண்டு சித்திரை குண்டம் திருவிழா..!

நாக பிள்ளையார் கோவிலிலிருந்து பட்டு, படைக்கலன் உடன் அம்மன் புறப்பாடு விழாவை தொடர்ந்து, இறுதி நாளான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை: கோவையில் ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ கருப்பராயர் ஸ்ரீ குருசக்தி நாதர் திருக்கோவில் 13-ஆம் ஆண்டு சித்திரை குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில், அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ கருப்பராயர் ஸ்ரீ குருசக்தி நாதர் திருக்கோவில் குண்டம் திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றுதல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் குருதி பூஜை, சண்டி பூஜாவை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் உடன் குண்டம் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பிரத்தியங்கிரா தேவி ஹோமம் நடைபெற்றது.



பின்னர் நாக பிள்ளையார் கோவிலிலிருந்து பட்டு, படைக்கலன் உடன் அம்மன் புறப்பாடு விழாவை தொடர்ந்து, இறுதி நாளான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவில் நிர்வாகி சித்தர் சாமி எனும் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இதில், கோவைபுதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பக்தர்கள், அக்னி சட்டி, பால்குடம், காவடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் 9 அடி மற்றும் 11 அடி நீள வேல்களை அலகு குத்தி பக்தியுடன் வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க செய்தது. தாழத் தட்டுகளுடன், அம்மன் ரத ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் அம்மனை பார்த்து வணங்கியபடியே குண்டம் இறங்கினர்.



பக்தர்கள் வழிபாடுகளின் இடையில், இரண்டு குதிரைகளும் குண்டத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...