கொடநாடு கொலை வழக்கு: கோவையில் அதிமுக நிர்வாகி சஜீவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக வர்த்தக அணி தலைவர் மற்றும் தனியார் பர்னிச்சர் கடை உரிமையாளரான சஜீவனிடம், தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கடந்த 2017 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இச்சம்பவம் தொடர்பான சயான் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மறு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் முதல் இதுவரை 200 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த 3 நாட்களுக்கு முன் சென்னையில் வைத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக வர்த்தக அணி தலைவர், தனியார் பர்னிச்சர் கடை உரிமையாளரான சஜீவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சஜீவன் மீது தொடக்கத்திலிருந்து பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில், கோவையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் கொடநாடு எஸ்டேட் கொள்ளைக்கு பங்களாவில் உள்ள லாக்கரை திறக்க ஏதேனும் உதவியுள்ளாரோ..? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...