சூலூர் தாலுகாவில் சுகாதார திருவிழா: கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைப்பு..!

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஆகியவை இந்த சுகாதார திருவிழாவில் நடைபெற்றன.


கோவை: கோவை, நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் சுகாதார திருவிழா கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வெங்கட்டாபுரம் மற்றும் சுல்தான்பேட்டையில் நடைபெற்றது.



இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஆகியவை இந்த சுகாதார திருவிழாவில் நடைபெற்றன.



சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார்.



இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தர்மராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பி.வி.மகாலிங்கம் மற்றும் முத்துமாணிக்கம், தர்மராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.



இந்நிகழ்வில் மாணவ, மாணவியருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. இதேபோன்று முதல்வர் காப்பீட்டு அட்டை ஆகியவைகள் வழங்கப்பட்டது. மேலும் முகாமில் கண், காது, பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இதேபோன்று வெங்கட்டாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சுகாதார திருவிழாவை பி.ஆர்.நடராஜன் எம்பி பங்கேற்று துவக்கி வைத்தார். சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரண்டு பகுதிகளில் நடைபெற்ற சுகாதாரத் திருவிழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...