பல மாதங்களாக திறக்கப்படாமல் இருக்கும் நியாயவிலைக் கடை - கோவை கன்ஸ்யூமர்ஸ் வாய்ஸ் அமைப்பினர் மனு!

கோவை மாவட்டம் ஆண்டக்காபாளையம் பகுதியில் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருக்கும் நியாய விலை கடையை திறக்க வலியுறுத்தி கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.


கோவை: கோயமுத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு ஆண்டக்காபாளையம் பகுதியில் நியாய விலைக்கடை பல மாதங்களாக திறக்கப்படாமல் இருப்பதாகவும், உடனடியாக அதை திறக்க வேண்டியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில், அன்னூர் வட்டம் வெள்ளானைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டக்காபாளையம் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த நியாய விலைக்கடை பழுதடைந்ததால், அது முற்றிலும் இடிக்கப்பட்டு புதிதாக நியாய விலை கடை அமைக்கப்பட்டுள்ளது

ஆனால், புதிதாக கட்டப்பட்ட அந்த நியாயவிலைக்கடை பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருப்பதால், அந்த கடையை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...