பொள்ளாச்சியில் தனியார் உணவக பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ.3.17 லட்சம் பணம் திருட்டு…!

பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள தனியார் உணவக பார்க்கிங்கில் நிறுத்திய காரை கண்ணாடியை உடைத்து, ரூ.3.17 லட்சம் பணத்தை மர்ம நபர் எடுத்துச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.



கோவை: கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் உணவக பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ.3.17 லட்சம் பணம் திருட்டுப் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மன்னூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரசாமி. இவர் இன்று வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்ததுள்ளார். அவர் வங்கியில் இருந்து பணத்துடன் வந்ததை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர், அவரை பின் தொடர்ந்து வந்துள்ளார். 

அப்போது, ஈஸ்வரசாமி பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள தனியார் உணவக கார் பார்க்கிங்கில் தனது காரை நிறுத்தி விட்டு, உணவகத்திற்குள் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் கார் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த ரூ.3.17 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். 

இந்த காட்சிகள் அனைத்தும் அந்த கார் நிறுத்துமிடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...