மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கோவை MSME தொழில் அமைப்பினர் நாளை டெல்லி பயணம்!

தொடர்ந்து அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் விலை உயர்வு பிரச்சனை குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி நிரந்தர தீர்வு காண கோவை தொழில் துறை அமைப்பினர் நாளை டெல்லி செல்லவுள்ளனர்.


கோவை: தொழில் நகரமான, கோவை டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், இன்ஜினியரிங் பொருட்கள், வெட் கிரைண்டர், மோட்டார் பம்பு செட், காஸ்டிங் என்பது உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தியில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்குகின்றன.

1.5 லட்சம் பதிவு செய்த தொழில் நிறுவனங்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. உற்பத்தி துறையின் கீழ் செயல்படும் பல்வேறு தொழில் நிறுவனங்களில், தமிழகம் மட்டுமின்றி நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக உற்பத்தி தொழில்துறை பிரிவின் கீழ் இயங்கும் அனைத்து தொழில் நிறுவனங்களும், கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப போராடி வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில், உற்பத்தி துறையில் பயன்படுத்தப்படும் ஸ்டீல், காப்பர், அலுமினியம், ஸ்கிராப், காஸ்டிங் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களின் விலை 100 முதல் 200 சதவீதம் வரை கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த பிரச்சினை குறித்து பல்வேறு தொழில் அமைப்புகளின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாடு முழுவதும் எம்எஸ்எம்இ, அதாவது நடுத்தர, சிறு மற்றும் குறு தொழில் துறையினர் இந்த பிரச்சினை குறித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். இருப்பினும், எவ்வித பயனும் இல்லை. நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதை தொடர்ந்து, கோவையை சேர்ந்த பல்வேறு தொழில் அமைப்பினர் நாளை டெல்லி செல்கின்றனர்.

இது குறித்து கோவை தொழில் துறை அமைப்பினர் கூறியதாவது: அனைத்து உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு மூலப்பொருட்கள் தான் மிக முக்கிய அடிப்படை தேவையாகும். அத்தகைய மூலப்பொருட்கள் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக 100 முதல் 200 சதவீதம் மற்றும் அதற்கு மேல் அதிகரித்து வருகிறது.

எம்.எஸ்.எம்.இ.,பிரிவைச் சேர்ந்த அனைத்து தொழில் நிறுவனங்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தாங்கள் எதிர் கொண்டு உள்ள பிரச்சினை குறித்து தொழில் அமைப்புகள் சார்பில் தனித் தனியாக மத்திய அரசிடம் கோரிக்கை மனு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.

இருப்பினும், இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சனை தொழில் முனைவோரின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. எனவே, இதற்கு மேலும் பொறுமை காத்தால் நிலைமை இன்னும் மோசமடையும்.



பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற காரணத்தால், கோவையை சேர்ந்த பல்வேறு எம்எஸ்எம்இ தொழில் அமைப்பினர் ICCI, 'CODISSIA', SIEMA, TACT, COTMA, TANSTIA, உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் ஒன்றாக சேர்ந்து நாளை டெல்லி செல்ல முடிவு செய்துள்ளோம்.



டெல்லியில் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து நிலைமை குறித்து புள்ளி விவரங்களுடன் தெரிவித்து, மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு, தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...