கோவையில் முத்தி பாளையம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளிவிட்டு தென்னந்தோப்புக்குள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அங்குள்ள வீட்டு சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் அருகே முத்திபாளையம், அருள் ஜோதி நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் வனத்தை விட்டு வெளியே வந்த, காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, அங்குள்ள வீதிகளில் சுற்றி திரிந்தது.
யானையை பார்த்த தெரு நாய்கள், குறைத்து சத்தம் போட்டது. இதனால், சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் வெளியில் வந்து பார்த்த போது, தெருவில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்ததை பார்த்துள்ளனர்.
யானையின் நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்கள் ஒருவருக்கொருவர் போன் செய்து யானையை தாங்களாகவே விரட்ட முடிவு செய்தனர். அதன்படி, மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், யானை அங்கிருந்து செல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் நின்றது.
பின்னர், அங்கிருந்து வனத்தை நோக்கி சென்ற யானை செல்லும் வழியில் கௌசல்யா என்பவரது வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளி அருகே இருந்த தென்னந்தோப்புக்குள் நுழைந்து மறைந்தது.
இதற்கிடையே, தகவல் அறிந்து அங்கே வந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், எவ்வளவு நேரம் தேடியும் யார் கண்களுக்கும் யானை தென்படவில்லை. தற்போது, கோடை காலம் என்பதால், நீரை தேடி வனத்தை விட்டு ஊருக்குள் யானைகள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளது. இதனால், மலை மற்றும் வனப்பகுதி அருகே வாழும் மக்கள், இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் வெளியே வர வேண்டும், என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.