கோவையில் குடியிருப்பு பூங்காவில் 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - தோட்டக்காரர், எலக்ட்ரீசியன் மீது வழக்குப்பதிவு!

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்ட் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இருவர் கைது.


கோவை: கோவை வடவள்ளியில் உள்ள தக்க்ஷா ஷான்ஸ்ராய் (Daksha Sanshray) என்ற தனியார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரதீஸ் - சுகன்யா. இவர்களது மகன் லக்‌ஷன் (11) நேற்று அப்பார்ட்மெண்ட் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே தனது மகன் உயிரிழந்து விட்டதாக சிறுவனின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், காவல்துறையிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிறுவனின் தாயார் சுகன்யா குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் விபத்து தொடர்பாக அலட்சியமாக செயல்பட்ட தோட்டக்காரர் மற்றும் எலட்ரிசியன் மீது வடவள்ளி போலீசார் 304(A) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...