கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ரஷ் ரிபப்ளிக் சார்பில் தாய்குடம் பிரிட்ஜின் இசை நிகழ்ச்சி..!

இதனை இணையதளம் வாயிலாகவும் (book my show) அல்லது டிக்கெட் முன்பதிவுக்கு 90871-44566, 96888-98444 என்ற எண்களை தொடர்பு கொண்டும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவையில் ரஷ் ரிபப்ளிக் எனும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் தாய் குடம் பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி ஹிந்துஸ்தான் கல்லூரியில் வருகின்ற ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

“தாய் குடம் பிரிட்ஜ்” என்ற இந்த இசைக்குழு கேரளா வினை தளமாக கொண்டதாகும். 2013-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொச்சியில் தாய் குடம் பிரிட்ஜ் அருகே இசைக்குழு தொடங்கப்பட்டதால் இசை குழு இவ்வாறு அழைக்கப்படுகின்றது.



மேலும், இந்த இசைக்குழு 96-படித்தின் மூலம் புகழ்பெற்ற கோவிந்த வசந்தா மற்றும் சித்தார்த் மேனன் ஆகியோரால் நிறுவப்பட்டது. “தாய் குடம் பிரிட்ஜ்” எனப்படும் இந்த இசைக்குழு ‘ஃபிஷ் ராக்’ என்ற இசை ஆல்பத்தை அவர்களது சொந்த இசை அமைப்பால் சமூக ஊடகங்கள் மற்றும் யூ-டியூப் மூலம் வெளியிட்டு அதன் மூலம் பிரபலமடைந்தனர்.

இவர்கள் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி தங்கள் சொந்த ஆல்பங்களை வெளியிட்டுள்ளனர். இந்த இசைக்குழுவினர் தமிழ், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகளில் ஆல்பங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் இசை பயணத்தின் ஒரு பகுதியாக கோயம்புத்தூரில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் முதன் முறையாக ரஷ் ரிபப்ளிக் சார்பில் “தாய் குடம் பிரிட்ஜ்” இவர்களின் இசை நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.

இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான முன்பதிவும் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை இணையதளம் வாயிலாகவும் (book my show) அல்லது டிக்கெட் முன்பதிவுக்கு 90871-44566, 96888-98444 என்ற எண்களை தொடர்பு கொண்டும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...