தினந்தோறும் 9 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 4.5 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே எடுக்கப்பட்டு வருவதால், தமிழக முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக துணை ஆணையர் தெரிவித்தார்.
கோவை: கேரள மாநிலம் சிறுவாணி அணையில் இருந்து கோவை மாநகராட்சிக்கு தினந்தோறும் 9 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 4.5 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே எடுக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து தமிழக முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கோவை மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா தெரிவித்தார்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களை ஊக்குவிக்கும் திட்டத்தில் ரூ2.5 கோடி மதிப்பீட்டில் கோவை மாநகராட்சியின் 17-வது வார்டுக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், சேரன் நகர் பகுதியில் 400 வீடுகளுக்கு முதற்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் 24 மணி நேர குடிநீர் விநியோக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.
இது தொடர்பாக பேட்டியளித்த மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா,
2.5 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசும், மாநகராட்சியும் பி.எஸ்.ஜி நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன எனவும், முதல்கட்டமாக 400 வீடுகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது எனவும் திட்டத்தின் செயல்பாட்டை பொறுத்து படிப்படியாக விரிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கு சூயஸ் நிறுவனம் மூலம் 24 மணி நேரம் தண்ணீர் வழங்கப் பட திட்டம் செயல்படுத்த படுகின்றது என்றும் சூயஸ் திட்டம் இல்லாத பகுதியில் 24 மணி நேரம் தண்ணீர் விநியோகம் செய்ய பைலட் திட்டம் செயல்படுத்த சோதனை அடிப்படையில் முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சிறுவாணி அணையில் இருந்து தினந்தோறும் 9 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில் , இப்போது 4.5 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து தமிழக முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் துணை ஆணையர் சர்மிளா தெரிவித்தார்.